முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது நில அபகரிப்பு புகார்!
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Advertisement
சிவகங்கை மேலூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கு சொந்தமாக காஞ்சிரங்கால் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் குடும்பத்தினர் அபகரித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனது தந்தை தொடர்ந்த வழக்கில் சாதமான தீர்ப்பு வந்தும், சுதர்சன நாச்சியப்பனின் குடும்பத்தினர் நிலத்தை தர மறுப்பதாக குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
விளம்பர நோக்கத்திற்காக தனலட்சுமி புகார் அளித்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.