முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!
10:09 AM Jan 16, 2025 IST
|
Sivasubramanian P
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Advertisement
2011 - 2016 காலக்கட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த பணத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, தனது உறவினர்கள் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக கடனாக பெற்றது போல கணக்கு காட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக கடந்தாண்டு இறுதியில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் அடிப்படையில், 100 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துக்களை சென்னை மண்டல அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article