செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு!

02:23 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்டம், திருத்து கிராமத்தைச் சேர்ந்தவரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

திருத்தம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இதனிடையே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பசாமி பாண்டியன் மறைவுக்குத் தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார். மேலும், கருப்பசாமி பாண்டியனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Former Tenkasi constituency MLA Karuppasamy Pandian passes away!MAINமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவு
Advertisement