முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் - நினைவிடத்தில் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டை இலை சின்னம் தொண்டர்களின் கரங்களுக்கு விரைவில் வந்து சேரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில், சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இதேபோல, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம் எனவும், மழை, வெள்ள பாதிப்புக்கு தமிழக அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல என்றும் தெரிவித்தார்.