முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் - விசாரணையில் தகவல்!
02:58 PM Dec 20, 2024 IST
|
Murugesan M
முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
நீலகிரி மாவட்டம் குன்னூர் வான் பகுதியில் நாட்டின் முதல் முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 8-இல் விபத்துக்குள்ளானது.
இதில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக நாடாளுமன்றக் குழு விரிவான விசாரணை மேற்கொண்டு, மக்களவையில் அறிக்கை சமர்ப்பித்தது.
Advertisement
அதில், விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக விபத்துக்கு அலட்சியமோ, தொழில்நுட்பக் கோளாறோ காரணமல்ல என விமானப் படை திட்டவட்டமாக மறுத்தது நினைவுகூரத்தக்கது.
Advertisement
Next Article