செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி!

09:40 AM Dec 19, 2024 IST | Murugesan M

மும்பையில் நடுக்கடலில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த படகு மீது மற்றொரு படகு வேகமாக மோதியதில், 13 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

மும்பை இந்தியா கேட் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோருடன் எலிபெண்டா தீவு நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுக்கடலில் சென்றபோது அந்த வழியாக வந்த அதிவேக படகு ஒன்று பயணிகள் படகு மீது மோதியது. இதில் பயணிகள் படகு கவிழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் உதவிக்காக அபய குரல் எழுப்பினர்.

தகவலறிந்த கடற்படை வீரர்கள் கப்பலில் சென்று துரிதமாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் தத்தளித்த 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement

அதில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
Boat accidentboat rammedElephanta IslandIndia GateMAINmumbai
Advertisement
Next Article