செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி!

09:58 AM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

Advertisement

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 3-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மா டக்அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, தீபக் சஹார் ஆகியோர் சற்று ஆறுதல் அளித்தனர்.

Advertisement

சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 புள்ளி 1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அணித்தலைவர் ருத்ராஜ் கெய்க்வாட், தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீச்சந்திரா ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

Advertisement
Tags :
cskCSK beat Mumbai Indians by 4 wickets!CSK dhoniIPL 2025.MAINசென்னை சேப்பாக்கம்
Advertisement