மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!
06:38 PM Jan 25, 2025 IST
|
Murugesan M
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ராணாவை நாடு கடத்த இந்தியா மனு தாக்கல் செய்தது. இதற்கு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Advertisement
இதனை எதிர்த்து ராணா தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அமெரிக்க உச்சநீதிமன்றமும் ராணாவை நாடு கடத்த அனுமதித்துள்ளதால், அவர் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Next Article