செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு - தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

10:19 AM Apr 12, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக  தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement

2008ஆம் ஆண்டு மும்பையில் தாஜ் ஒட்டல் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்த நிலையில், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 9ஆம் தேதி இந்தியாவின் என்ஐஏ அதிகாரிகளிடம் தஹாவூர் ராணா ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement

இதனை தொடர்ந்து டெல்லி அழைத்துவரப்பட்ட தஹாவூர் ராணாவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின், டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் தஹாவூர் ராணா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 18 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement
Tags :
FEATUREDMAINmumbai serial blast casenia questioned Tahawoor RanaTahawoor Rana
Advertisement