செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு - அண்ணாமலை

04:08 PM Feb 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என மேடையிலேயே உதயநிதி பொய் சொல்வதாக தெரிவித்தார்.

இந்திக்கு எதிராக கோலம் போட்டது மக்கள் அல்ல என்றும்,  திமுகவினர் தான் என்பது தமிழ் ஜனம் தொலைக்காட்சி கள ஆய்வில் அம்பலமானதாகவும் அவர் கூறினார்.

Advertisement

தரமில்லாத அரசியல்வாதி தமிழகத்தில் இருக்கிறார் என்றால் அது உதயநிதி தான் என்றும்,  உதயநிதி பிற தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

PM SHRI பள்ளிகளை ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக அரசு தெரிவித்ததாகவும் அண்ணாமலை கூறினார்.

அடுத்த வாரம் சென்னை வருவதாகவும்,  அண்ணா சாலையில் எங்கு வர வேண்டும் என  நேரத்தையும், நாளையும், இடத்தையும் குறிக்கட்டும். அங்கு வருகிறேன் என்றும் அண்ணாமலை கூறினார்.

பா.ஜ., தொண்டர்கள் வர மாட்டார்கள் என்றும்,  தனி ஆளாக வருவதாகவும், முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கும் தரத்திற்கும், எந்த சம்பந்தம் இருக்கின்றதா என்றும்,
தரமில்லாத அரசியல்வாதி தமிழகத்தில் உள்ளார் என்றால் அது உதயநிதி ஸ்டாலின் தான் என்றும்,  தந்தை பெயரையும், தாத்தா பெயரையும் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகிவிட்டதாகவும்  அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்திருப்பதை ஏடிஜிபி-யே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement
Tags :
annamalaiannamalai pressmeetDMKFEATUREDMAINtamilnadu bjp presidentthree-language policyudhayanidhi
Advertisement