செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் - தமிழிசை சௌந்தரராஜன்

06:53 AM Feb 07, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பாடி திருவலீசுவரர் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட எழுச்சி மிக விரைவில் தமிழகம் முழுவதும் ஏற்படும். எங்களுடைய உரிமைக்காக  போராடுகிறோம்.  திருப்பரங்குன்றம் மலை தான் குன்றன் மலை தான் தவிர சிக்கந்தர் மலை இல்லை என்றும் அவர்  கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறுகிறார். ஆனால் முருகனின் அறுபடை வீடுகள் உள்ள 12 கரங்கள் அவரின் இரண்டு இரும்பு கரங்களையும் அடக்கும் என்றும்  தமிழிசை கூறினார்.

Advertisement

பல்கலைக்கழகங்களில் கட்சிக்காரர்கள் துணைவேந்தராக நியமிப்பதை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை கொண்டு வருகிறது இதைப் பற்றி போராடுவதற்கு ராகுல் காந்திக்கும் துணைவேந்தர் நியமனம் பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கும்  எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கங்கையில் 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவில் முதலில் மு க ஸ்டாலின் ஸ்நாணம் செய்தால் தான் தமிழக மக்களுக்கு அவர் செய்த பாவங்கள் விலகும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
FEATUREDMAINMinister Shekar Babu.MK Stalinrahul gandhiSenior BJP leader Tamilisai SoundararajanSikandar HillThiruparankundram hill issue
Advertisement