செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது : உச்ச நீதிமன்றம்!

02:05 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இருமடங்கு வயதிலும் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கை வேறு அமர்வு விசாரித்து வருவதாகவும், இந்த வழக்கையும் நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வுக்கே பரிந்துரைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

மனுதாரர் தரப்பில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என்றும், எனவே அணையை ஆய்வு செய்து போதிய திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இருமடங்கு வயதிலும் உறுதியாக உள்ளது என்றும், காமிக்ஸ் கதைகளை போல மக்கள் அச்ச உணர்வில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINMullaperiyar DamMullaperiyar dam is firm: Supreme Court!supreme court
Advertisement