செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் சீக்கிய முறைப்படி தகனம்!

02:52 PM Dec 28, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

Advertisement

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை மன்மோகன் சிங்கின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், அவரது மகள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் அங்கிருந்து டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோர் வருகை தந்தனர். பின்னர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தலைவர்களின் இறுதி மரியாதையை அடுத்து மன்மோகன் சிங்கின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சந்தனக் கட்டைகள் மீது மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டது. பின்னர் சீக்கிய மத முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு மன்மோகன் சிங்கின் உடல் தகனம் நடைபெற்றது.

முன்னதாக மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்த நிலையில், நினைவிடம் அமைக்க நிச்சயம் இடம் ஒதுக்கப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

Advertisement
Tags :
delhiFEATUREDFormer Prime Minister Manmohan Singh'MAINManmohan Singh's body crematedNigambodh Ghat.Sikh rites
Advertisement