மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
09:12 AM Mar 18, 2025 IST
|
Ramamoorthy S
கொரோனா தொற்றை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் கொண்டுவர கோரி, மக்களவையில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
Advertisement
மக்களவை கூடியதும் விஜய் வசந்த் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்தில், கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்தது போல் மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினார்.
சலுகை நிறுத்தப்பட்டதால் பலதரப்பு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறிய அவர்,
Advertisement
இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகைகள் வழங்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement