செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மூன்றாவது காசி தமிழ் சங்கமம் - பதிவு செய்வது எப்படி?

09:28 AM Jan 16, 2025 IST | Murugesan M

காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

பாரதப் பிரதமர்  மோடி அவர்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம், காசி மற்றும் தமிழகத்தின் செழுமையான கலாச்சாரங்களை ஒன்றிணைத்ததோடு, அவற்றின் தொன்மையான தொடர்புகளைக் கொண்டாடும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது.

இன்றைய தினம், நமது  மத்திய கல்வித்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான்
மூன்றாவது காசி தமிழ் சங்கமம், வரும் பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்கவிருப்பதையும், காசி தமிழ் சங்கமத்தின் இணையதளப் பக்கத்தையும் அறிவித்துள்ளார்.

Advertisement

காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு, வரும் பிப்ரவரி 1, 2025 அன்று நிறைவடையும். மூன்றாவது காசி தமிழ் சங்கமத்திற்குப் பதிவு செய்வதற்கான இணையதள முகவரி https://kashitamil.iitm.ac.in/registration என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
agastya Munivarannamalaidharmendra pradhanFEATUREDhttps://kashitamil.iitm.ac.in/registrationKashi Tamil SangamMAINprime minister modiTamil NaduTamil Nadu BJP State President
Advertisement
Next Article