மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி
03:34 PM Jan 23, 2025 IST | Murugesan M
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை ஒட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையிலிருந்து நாம் உத்வேகம் பெறுவதாக கூறினார்.
Advertisement
கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி என பெருமிதத்துடன் தெரிவித்த பிரதமர் மோடி, உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிப்பதாக கூறினார்.
Advertisement
Advertisement