செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி - சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்!

12:02 PM Dec 02, 2024 IST | Murugesan M

வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Advertisement

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 48 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதனால், புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும், புயல் மற்றும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தத்தளித்த ஏராளமானோரை ராணுவத்தினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

Advertisement

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மெல்ல மெல்ல புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

Advertisement
Tags :
chennai metrological centerFEATUREDfengalheavy rainlow pressureMAINmetrological centerpuduchery flood floodrain alertrain warningtamandu rainweather update
Advertisement
Next Article