செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேக் இன் இந்தியா சூப்பர் : பாராட்டி தள்ளும் ரஷ்ய அதிபர் புதின் - சிறப்பு கட்டுரை!

09:00 PM Dec 07, 2024 IST | Murugesan M

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் இந்தியா முழுவதும் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

2030ம் ஆண்டுக்குள் ரஷ்யாவுடனான இந்தியாவின் வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், பிரதமர் மோடி, தொழில் செய்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார்.

Advertisement

தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் முக்கியத்துவம் அளித்து வரும் பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தையும் ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். மேலும்,உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 'மேக் இன் இந்தியா 'திட்டம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு கடுமையான பொருளாதார தோல்வியின் விளிம்பில் இந்தியா இருந்தது. இந்தியாவில் முதலீடு செய்வது ஒரு அபாயமா அல்லது ஒரு வாய்ப்பா என்று உலக முதலீட்டாளர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

இந்த நெருக்கடியான சூழலில், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில், பிரதமர் மோடியால் மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் வடிவமைக்கப்பட்டது.

'குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆட்சி' என்ற பிரதமர் மோடியின் கொள்கையின் அடிப்படையில் மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் தேசத்தில் உள்ள வணிகச் சூழல் சாதகமாக இருப்பதை உறுதிசெய்கிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு (ODOP)’ என்ற முன்முயற்சி தொடக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தியாளர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்கவும் மத்திய அரசு உதவி செய்கிறது.

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மேக் இன் இந்தியா திட்டம் வழிவகை செய்துள்ளது. குறிப்பாக, சுமார் 101 நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. 31 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் சுமார் 57 துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கி, கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தால் ஏற்றுமதி அதிகரித்து இந்திய பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. “இந்தியாவில் தயாரிப்போம்' என்பது 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியை வெளிக்காட்டி உள்ளது. உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக இந்தியா மாறி இருக்கிறது.

உள்நாடு, வெளிநாடு வர்த்தகங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 1,46,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் பல்வேறு துறைகளில் வந்துள்ளன.

‘மேக் இன் இண்டியா' திட்டத்தால் சுமார் 8.5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஸ்டார்ட்அப் தொழில் இந்தியாவில் உருவாகிறது. இதன் மூலம் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கடந்த ஜுன் மாதம் வரை 10.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி அல்லது விற்பனை நடக்கிறது.

சர்வதேச அளவில் செல்போன்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆட்டோ மொபைல் தொழிலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு, இராணுவ தளவாடங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தி 1,27,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இராணுவ ஏற்றுமதி சுமார் 90 நட்பு நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.

சர்வதேச அளவில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 50 சதவீதம் இந்தியாவில் இந்தியாவின் உற்பத்தி ஆகிறது. மேலும், செமி கண்டக்டர் உற்பத்திக்கு 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இந்தியா செயல் படுத்தியுள்ளது.

இந்த சூழலில் தான் ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவின் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கும் உச்சிமாநாட்டில், SME களின் வளர்ச்சியை மேம்படுத்த பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு நிதி பாதுகாப்பு, மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் கொள்கைகளை ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதையே ரஷ்ய அதிபரின் பேச்சு காட்டுகிறது.

பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDMAINPM ModiIndiaMake in indiaRussian president putinExternal Affairs Minister S Jaishankar
Advertisement
Next Article