மேட்டுப்பாளையம் அருகே சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்!
10:55 AM Oct 28, 2024 IST
|
Murugesan M
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Advertisement
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று லிங்கபுரம் கிராமத்தின் அருகே வந்தது.
அப்போது கிராமத்தின் பிரதான சாலையான சிறுமுகை சாலையில் நின்றுக்கொண்டிருந்த காட்டு யானை அங்குமிங்குமாக உலாவந்ததை கண்ட பொதுமக்கள் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் யானை குறித்த எச்சரிக்கையை விடுத்தனர்.
Advertisement
பின்னர் தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement