மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட சிறப்பு முகாம்!
மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் அலுவலகத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதியவர்கள் பலனடையும் வகையில் காப்பீட்டு திட்டம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
Advertisement
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொன்விழா நகரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த முதியவர்கள், இத்திட்டத்தில் தங்ளை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர்.
மேலும், சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.