மேற்கு தொடர்ச்சி பகுதியில் பூத்துக் குலுங்கும் சிறு குறிஞ்சி மலர்!
04:33 PM Jan 15, 2025 IST
|
Murugesan M
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பூத்துக் குலுங்கும் சிறு குறிஞ்சி மலர்களுடன் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Advertisement
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள் உலகளவில் பிரசித்தி பெற்றவை. குறிஞ்சி மலர்களில் 100-க்கும் மேற்பட்ட வகை உள்ளதாக பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் 14-க்கும் மேற்பட்டவை கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. அதில் ஒரு வகையான 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பூத்துக் குலுங்குகின்றன. கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிறு குறிஞ்சி மலர்களை ஆர்வத்துடன் பார்த்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement
Next Article