செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேற்கு வங்கத்தில் பாஜக ஊடக பிரிவு ஊழியர் கொலை - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றச்சாட்டு!

11:42 AM Nov 10, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மேற்கு வங்கத்தின் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு ஊழியர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்துக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் உஸ்தி நகரில் பாஜகவின் கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய உடலின் சில பகுதிகளில் காயங்கள் இருந்தன.

இது தொடர்பான விசாரணையில், கொலையான நபர் பிருத்விராஜ் நஸ்கார் என்பதும், பாஜகவின் சமூக ஊடக பிரிவில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

இந்தப் படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவினரை மிரட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பெண் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
bjpbjp social media worker murderMAINPrithviraj NaskarUsti Nagawest bengal
Advertisement