மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பெருகும் ஆதரவு - முறிகிறது இண்டி கூட்டணி!
ராகுல் காந்திக்கு எதிராக இண்டி கூட்டணி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அக்கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலிலும் இண்டி கூட்டணி பின்னடைவை சந்தித்தது.
அதேவேளையில், மேற்குவங்க இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, இண்டி கூட்டணியை தலைமையேற்று நடத்த தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் ராகுல் காந்தியின் தலைமைத்துவம் மீது கேள்வி எழுந்த நிலையில், மம்தா பானர்ஜிக்கு இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெளிப்படையான ஆதரவை அளித்துள்ளார்.
இதேபோல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் இண்டி கூட்டணியை வழிநடத்த மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ், மம்தா பானர்ஜி தேசிய தலைவராக உருவெடுக்க முயற்சிப்பதாக அவரை விமர்சித்தது.
இதன் காரணமாக இண்டி கூட்டணி முறியும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.