மேலும் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஞானசேகரன் - விசாரணையில் தகவல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்னொரு மாணவிக்கும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
Advertisement
பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவரது தோழி ஒருவரிடமும் கைதான ஞானசேகரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த மாணவியையும் ஞானசேகரன் மிரட்டியிருப்பதும், ஞானசேகரன் செல்போனில் 2 மாணவர்களின் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதும், செல்போனில் 5 ஆபாச வீடியோக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் FIR நகல் இணைய தளங்களில் வெளியானதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மாணவியின் பெயர், விலாசம், செல்போன் நம்பர் உட்பட அனைத்து விவரங்களும் வெளியாகி உள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மாணவியின் அடையாளங்கள் வெளியானதற்கு போலீசார் பொறுப்பேற்பார்களா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.