மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!
மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்தாண்டு அக்டோபரில் மத்திய அரசிடம் திமுக அரசு அனுமதி கேட்டதாக, ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதலமைச்சர் ஸ்டாலின் மறைத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க முயற்சித்தாக விமர்சித்துள்ள இபிஎஸ்,
ஏமாற்று வேலையில் ஈடுபடும் திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.