செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மைனர் பெண் கருக்கலைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

12:54 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தனது மகளின் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது 16 வயது மகள் சட்ட விரோதமாக கருவுற்று இருப்பதாகவும், எனவே அதனை கலைக்க வேண்டி அரசு மருத்துவமனையை அணுகியதாகவும், ஆனால் 24 வாரம் கடந்து விட்டதால் கருவை கலைக்க முடியாது எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், குழந்தை பெற்றுக்கொள்வது உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெண்ணின் தனிப்பட்ட உரிமை எனவும், ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மைனராக இருந்தால் அவரது விருப்பத்தை கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், அரசு மருத்துவமனை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்கு போக்சோ விசாரணையில் உள்ளதால் சிசுவை பத்திரப்படுத்தி வைக்க அரசு மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
Abortion of minor girl: Madras High Court action order!MAINtamil janam tv
Advertisement