மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது : சந்திரபாபு நாயுடு
01:28 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Advertisement
மொழி விவகாரம் குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மொழி என்பது தகவல் தொடா்புக்கானது மட்டுமே என்றும், மொழியால் அறிவு வளா்ந்துவிடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தாய்மொழியில் கல்வி கற்பவா்கள் மட்டுமே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்கி வருகின்றனர் என்றும், தாய்மொழியில் கல்வி கற்பது எளிது எனவும் கூறியுள்ளார்.
Advertisement
மொழி என்பது வெறுப்புக்குரியது அல்ல எனக்கூறியுள்ள அவர், தேசிய மொழியான ஹிந்தியும், சா்வதேச மொழியான ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மொழியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது என்றும், முடிந்தவரைப் பல மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Advertisement