மோசமான வானிலை : நாகை - இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்!
05:10 PM Nov 16, 2024 IST
|
Murugesan M
மோசமான வானிலை காரணமாக நாகை - இலங்கை கப்பல் சேவை இன்று முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கியது. சிவகங்கை என்ற பெயர் கொண்ட இந்த பயணிகள் கப்பல், வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்தது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, வரும் 19ஆம் தேதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்படும் என ஏற்கனவே, தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்திருந்தது.
Advertisement
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இன்று முதல் டிசம்பர் 18 -ம் தேதி வரை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article