யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் திமுக நிர்வாகி என்பதை ஒப்புக்கொள்வார்கள் - அண்ணாமலை
01:45 PM Jan 08, 2025 IST
|
Murugesan M
யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
"அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று. ஞானசேகரன் திமுக அனுதாபி தான், ஆனால் திமுக நிர்வாகி இல்லை என்கிறார்கள் இன்று.
Advertisement
விரைவில் "யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
Next Article