For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

யார் அந்த SIR ? - முதலமைச்சர் ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய எச். ராஜா!

06:05 PM Dec 31, 2024 IST | Murugesan M
யார் அந்த sir     முதலமைச்சர் ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய எச்  ராஜா

திராவிட மாடல் ஆட்சியால் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்று மேடைகள் தோறும் முழங்கி வருகிறீர்களே? அது உண்மையானால் தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாக திவால் நிலையில் இருக்கிறதே அதற்கு காரணம் யார்? பதில் சொல்லுங்கள் "SIR" ? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

யார் அந்த SIR ? என்கிற கேள்விக்குத்தான் இதுவரை உங்களுடைய திராவிட மாடல் அரசு பதில் அளிக்கவில்லை.

கீழ்க்கண்ட கேள்விக்களுக்காவது நீங்கள் பதிலளியுங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
SIR அவர்களே... நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000/- கொடுக்க வேண்டும் என்று அன்றைய ஆளுங்கட்சியை வலியுறுத்தினீர்களே? நீங்கள் ஆளுங்கட்சியான பிறகு அதை செய்தீர்களா? பதில் சொல்லுங்கள் "SIR" ?

Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம் என்று சொன்னீர்களே? இதுவரை செய்தீர்களா? தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே அதிலும் பெரும்பாலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உங்களுடைய கட்சியினராகவே இருக்கிறார்களே?

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? பதில் சொல்லுங்கள் "SIR" ? மாதந்தோறும் மின் கணக்கீடு முறை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தீர்களே? ஆட்சிக்கு வந்த உடன் அதை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? பதில் சொல்லுங்கள் "SIR" ? ஆட்சிக்கு வந்த உடன் மின்கட்டணம், பால்விலை கட்டணம், பஸ் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், வீட்டுவரி கட்டணம், சொத்துவரி கட்டணம், குடிநீர்வரி கட்டணம் என அனைத்தையும் உயர்த்தினீர்களே? இது நியாயமா? பதில் சொல்லுங்கள் "SIR" ?

நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை படிப்படியாக இழுத்து மூடுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்களே? ஆட்சிக்கு வந்த பிறகு இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக்கில் மது விற்பனை செய்கிறீர்களே? அதுமட்டுமல்லாமல் செந்தில்பாலாஜியை அத்துறைக்கு அமைச்சராக்கி பாட்டிலுக்கு பத்து ரூபாயை கூடுதலாக வசூலிக்க மறைமுகமாக அனுமதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்தீர்களே இது நியாயமா? பதில் சொல்லுங்கள் "SIR" ?

உங்கள் ஆட்சியில் ஒருபக்கம் டாஸ்மாக் விற்பனை கன ஜோராக நடந்து கொண்டிருக்கும் போது மறுபக்கம் விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உங்கள் கட்சியினர் விற்பனை செய்த விஷசாராயத்தால் இதுவரை 88 பேர் உயிரிழந்து இருக்கிறார்களே? அதற்குக் காரணமாக குற்றவாளிகள் மருவூர் ராஜா முதல் கருணாபுரம் கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் வரை அனைவருமே உங்கள் கட்சியினராகவே இருக்கிறார்களே?

கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க சாராய விற்பனையில் ஈடுபடும் உங்கள் கட்சியினரை திருத்த என்ன செய்யப்போகிறீர்கள்? பதில் சொல்லுங்கள் "SIR" ? ஜாஃபர் சாதிக் முதல் புதுக்கோட்டை சுந்தரபாண்டியன் வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபவர்கள் அனைவருமே உங்கள் கட்சியினராக இருக்கிறார்களே? போதைப்பொருள் பரவலாக்கலை கட்டுப்படுத்த நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? பதில் சொல்லுங்கள் "SIR" ?

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம் என தேர்தலில் வாக்குறுதி அளித்தீர்களே? இந்திராகாந்தி அம்மையார் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தமிழக சட்டமன்றத்தில் கட்சத்தீவு, சொச்சத்தீவு, மிச்சத்தீவு என எதுகை மோனையாக வசனம் பேசி ஒப்புதல் தந்த அந்த தலைவர் யார்? பதில் சொல்லுங்கள் "SIR" ?

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தீர்களே? காவிரி நதிநீர் பங்கீடு உரிமையில் காங்கிரஸின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து தமிழகத்தின் உரிமையை தாரைவார்த்து கையெழுத்திட்ட அந்த தமிழக முதல்வர் யார்? பதில் சொல்லுங்கள் "SIR" ?

திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றீர்களே? செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் வரை சென்ற திமுக வழக்கறிஞர்கள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற ஒருமுறை கூட உச்சநீதிமன்றம் செல்லாதது ஏன்?

பதில் சொல்லுங்கள் "SIR" ? கர்நாடகாவில் சித்தராமையாவின் பதவியேற்பு விழாவிற்கு நேரில் சென்றீர்களே! ஒருமுறையாவது காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவிற்கு நேரில் சென்றிருக்கிறீர்களா? பதில் சொல்லுங்கள் "SIR" ?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தீர்களே? தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிம வளங்கள் மாஃபியாக்களால் சுரண்டப்படுகிறதே அதைத்தடுக்க நீங்கள் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? பதில் சொல்லுங்கள் "SIR" ?

திராவிட மாடல் ஆட்சியால் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்று மேடைகள் தோறும் முழங்கி வருகிறீர்களே? அது உண்மையானால் தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாக திவால் நிலையில் இருக்கிறதே அதற்கு காரணம் யார்? பதில் சொல்லுங்கள் "SIR" ?

வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முதலீடுகள் செய்தவற்காக கடன் வாங்குவதில் தவறில்லை ஆனால் ஒரு பழைய கடனை அடைக்க ஒரு புதிய கடனை வாங்குவதை வழக்கமாகவும், வாடிக்கையாகவும் செய்து வருகிறதே உங்கள் அரசு அதற்குப் பெயர் தான் திராவிட மாடலா? பதில் சொல்லுங்கள் "SIR" ?

நீங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்றை நியமித்தீர்களே அந்தக்குழு நீங்கள் கடன்மேல் கடன் வாங்கி தமிழர்கள் அனைவரையும் கடன்காரர்கள் ஆக்க கடன் வாங்குவது எப்படி என ஆலோசனை வழங்கத்தானா? பதில் சொல்லுங்கள் "SIR" ?

நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாகவும், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ரூ.3.25/- (மார்ச் 2023 வரை நிதிநிலை கணக்கெடுப்பின்படி) லட்சம் ரூபாய் கடன் செலுத்த வேண்டிய நிலையிலும் இருக்கும் போது திமுகவை சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்களே அது மட்டும் எப்படி சாத்தியம்? பதில் சொல்லுங்கள் "SIR" ?

உங்களுடை திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் படுகொலைகளும், ஊர்தோறும் போதைப்பொருள் பரவலாக்கலும் இடைவிடாது நடக்கிறதே அதைத்தடுக்க வேண்டிய உங்களுடைய இரும்புக்கரம் செயலிழந்து இருக்கிறதே அதை எப்போது சரி செய்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்யப் போகிறீர்கள்? பதில் சொல்லுங்கள் "SIR" ?

Advertisement
Tags :
Advertisement