செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யார் இந்த ஹிமானி மோர்? : ஒலிம்பிக் நாயகனை கரம் பிடித்த சோனிபட் மங்கை - சிறப்பு தொகுப்பு!

08:00 AM Jan 22, 2025 IST | Sivasubramanian P

நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா திருமணம் பெரிய ஆடம்பரங்களின்றி இருவீட்டார் முன்னிலையில் நடந்து முடிந்த நிலையில், அவரை கரம் பிடித்துள்ள ஹிமானி மோர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

ஈட்டி எறிதல் போட்டியில் டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி என இந்திய நாட்டிற்காக இரு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று தந்த பெருமைக்குரியவர் நீரஜ் சோப்ரா.

உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். அண்மையில் ஹிமானி மோர் என்பவரை மணந்த இவர், தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.

Advertisement

நீரஜ் சோப்ரா சமூக வலைதளத்தில் பகிர்ந்த திருமண புகைப்படங்களால் இவர்களின் திருமண பந்தம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், "இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றி; அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறேன்" எனவும் தனது பதிவில் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள நீரஜ் சோப்ராவின் ரசிகர்கள், மணமக்கள் இருவருக்கும் தங்கள் அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே யார் இந்த ஹிமானி மோர் என நீரஜ் சோப்ராவின் ரசிகர்கள் பலர் எழுப்பிய கேள்விக்கு விடையாக, அவர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஹரியானா மாநிலத்திலுள்ள சோனிபட் நகரைச் சேர்ந்தவர் ஹிமானி.

'MIRANDA HOUSE' என்று அழைக்கப்படும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த இவர், அரசியல் அறிவியல் மற்றும் உடல்கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

டென்னிஸ் வீராங்கனையான இவர் டெல்லி பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, 2017-ல் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.

தேசிய அளவிலான டென்னில் போட்டிகளில் விளையாடியுள்ள ஹிமானி மோர், கடந்த 2018-ம் ஆண்டுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தரவரிசை பட்டியலில், ஒற்றையர் பிரிவில் 42-வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 27-வது இடத்திலும் இருந்தார்.

தேசிய அளவில் விளையாடத் தொடங்கிய அதே ஆண்டில் ஹிமானி தரவரிசை பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்திற்கு முன்னேறியது, அந்த விளையாட்டில் அவர் காட்டிய முனைப்பை அனைவருக்கும் வெளிச்சமிட்டு காட்டியது.

உடல்கல்வியில் ஹிமானிக்கு இருந்த ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அங்குள்ள தென்கிழக்கு லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்ற ஹிமானி, விளையாட்டு மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார்.

தொடர்ந்து பிராங்கிளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து விளையாட்டு மற்றும் உடல்தகுதி நிர்வாகம், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளில் MBA பட்டங்களை பெற்றார். தற்போது ISENBERG SCHOOL OF MANAGEMENT-ல் அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் ஹிமானி, மசாசுசெட்ஸில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் பட்டதாரி உதவியாளராகவும் பணியாற்றி வருகிறாராம்.

Advertisement
Tags :
FEATUREDMAINNeeraj Chopra's weddingjavelin thrower Neeraj Chopra'Himani MoreMIRANDA HOUSE'
Advertisement
Next Article