யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தனி தீர்மானம் - பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!
01:40 PM Jan 09, 2025 IST
|
Murugesan M
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், யுஜிசியின் அறிவிப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறினார்.
யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தனி தீர்மானம் கொண்டு வந்ததை பாஜக எதிர்த்தது என தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசும்போது நேரலையில் காட்டப்படாதது ஒருதலைபட்சமான முடிவு என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
Next Article