செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யுஜிசி நெட் மறுதேர்வு - புதிய அட்டவணை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை!

10:50 AM Jun 29, 2024 IST | Murugesan M

தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு, ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு மற்றும் என்சிஇடி தேர்வு ஆகியவற்றிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கைக்கான யுஜிசி நெட் தேர்வு கடந்த ஜூன் 18 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதில் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இந்நிலையில், நெட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததை அடுத்து ஜூன் 19ம் தேதி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இதனிடையே, ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த 5 அறிவியல் பாடங்களுக்கான சிஎஸ்ஐஆர்- யுஜிசி- நெட் தேர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு, ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரத்து செய்யப்பட்ட யுஜிசி-நெட் தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற்ற நிலையில், மறுதேர்வு கணினி வழியில் நடைபெறவுள்ளது.

அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வு முன்னதாக திட்டமிட்டப்படி ஜூலை 6ம் தேதி நடைபெறும் என புதிய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINUGC NET Re-examination - National Examination Agency released new schedule!
Advertisement
Next Article