செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யோகா மூலம் ஆரோக்கியம் நிறைந்த உலகம் - பிரதமர் மோடி விருப்பம்!

06:15 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

யோகா வழியே ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

120-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த 8 ஆண்டுகளில் 1,100 கோடி கன மீட்டர் தண்ணீர் சேமிப்பு நடந்துள்ளதாகவும், புதிய நீர் தேக்க கட்டமைப்புகள் இதை சாத்தியமாக்கியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அவரது உரையில், யோகா தினத்திற்கு 100-க்கும் குறைவான நாட்களே உள்ளதாகவும், அது தற்போது பிரம்மாண்ட திருவிழாவாக மாறி விட்டதாகவும் கூறினார். "ஒரே பூமி - ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" என்பது 2025-ம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருளாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

யோகாவின் வழியே உலகின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறையை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

Advertisement
Tags :
MAINmodi speechmann ki baatprime minister modiyoga"One Earth - One Health Yoga".inadian prime ministerFEATURED
Advertisement