ரயில்வே யூனியன் பொதுத்தேர்தல் - ரயில்வே கார்மிக் சங்கத்திற்கு ஆதரவாக பாரதிய மஸ்தூர் சங்கம் பிரசாரம்!
ரயில்வே யூனியனில் 20 ஆண்டுகளாக நிகழும் அநீதிகளுக்கு முடிவுகட்ட தக்சின் ரயில்வே கார்மிக் சங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Advertisement
ரயில்வே யூனியனுக்கான பொதுத்தேர்தல் வரும் டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலையில் தக்சின் ரயில்வே கார்மிக் சங்கத்திற்கு ஆதரவாக பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது , 20 ஆண்டுகளாக யூனியனில் பதவி வகித்து வரும் எஸ்.ஆர்.எம்.யூ சங்கம் தொழிலாளர்களுக்கு இழைத்து வரும் அநீதி குறித்து விரிவாக பேசினார்.
பாரதிய மஸ்தூர் சங்கம் ஆதரவு பெற்ற தக்சின் ரயில்வே கார்மிக் சங்கத்திற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.