செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு - சதீஷ் குற்றாவளி என தீர்ப்பு!

03:15 PM Dec 27, 2024 IST | Murugesan M

பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான சதீஷை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் என்பவரைக் காதலித்த சத்யபிரியா, பெற்றோர் எதிர்ப்பால் அவருடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், 2022 அக்டோபர் 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன்பு தள்ளிவிட்டுக் கொலை செய்தார்.  இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

தற்போது அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் அடிப்படையில் சதீஷை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ஸ்ரீதேவி  தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Chennai Women's CourtMAINParangimalai railway stationpushing a young woman in front of a trainst thomas mount railway station
Advertisement
Next Article