செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரவுடி ஜான் கொலை வழக்கு - விசாரணை முடிவடைந்த நிலையில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்!

08:18 AM Mar 25, 2025 IST | Ramamoorthy S

ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் சாணக்யா, ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 19-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த பார்த்தீபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகிய 5 பேரை சித்தோடு போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் முடிவில் 5 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். ரவுடி ஜான் கொலையில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Coimbatore National Highwayerodejudicial custodyMAINNashiyanurRowdy John murder case
Advertisement
Next Article