ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்! : ரந்தீர் ஜெய்ஸ்வால்
10:24 AM Jan 15, 2025 IST
|
Murugesan M
ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு ஆண்டுகளை கடந்தும் தாக்குதல் நீடித்து வருகிறது.
போர் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ராணுவத்தில் சேர்க்கப்படுவது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய படையில் இணைந்த கேரள இளைஞர் உயிரிழந்ததை அடுத்து, ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளிடம், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
Next Article