செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரஷ்ய அதிபருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை!

11:14 AM Dec 11, 2024 IST | Murugesan M

ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினை நேரில் சந்தித்தார்.

Advertisement

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்திய - ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அதிபர் புதின் கைகுலுக்கி வரவேற்ற நிலையில், பிரதமர் மோடி தரப்பில் அவருக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Advertisement

பின்னர் அவருடன் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு உயரமான மலைகளை விட உயரமானது எனவும், ஆழமான கடலை விட ஆழமானது எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும், இந்தியா எப்போதும் ரஷ்ய நண்பர்களுக்கு துணையாக இருக்கும் என தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் இது தொடரும் என குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்ரேய் பொலோசௌவ் உடனிருந்தார்.

Advertisement
Tags :
Defense Minister Rajnath SinghFEATUREDKremlinMAINmoscowRussian Defense Minister Andrei PolozovRussian President Vladimir Putin
Advertisement
Next Article