ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை விவகாரம் - மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
09:30 AM Mar 25, 2025 IST
|
Ramamoorthy S
மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதாகவும், எனவே அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அலகாபாத் உயா்நீதிமன்ற லக்னோ அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, அஜய்குமாா் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுலின் குடியுரிமை விவகாரத்தில் முடிவெடுக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென மத்திய அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மாதத்திற்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Advertisement