ராஜ்கபூர் சர்வதேச திரைப்பட விழா - பிரதமர் மோடிக்கு குடும்பத்தினர் அழைப்பு!
10:27 AM Dec 12, 2024 IST | Murugesan M
மும்பையில் நடைபெறவுள்ள ராஜ்கபூர் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நேரில் அழைப்பு விடுத்தனர்.
மறைந்த ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் பொருட்டு, வரும் 13-ஆம் தேதி அவரது 100ஆவது பிறந்த நாளையொட்டி சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
Advertisement
இதையொட்டி, ராஜ்கபூர் குடும்ப உறுப்பினர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், கரிஷ்மா கபூர், நடிகர் சாயிப் அலிகான் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.
Advertisement
Advertisement