ராணிப்பேட்டை : வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளை!
02:09 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
Advertisement
ஆற்காடு நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சாமி என்பவர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
அப்போது அவரது வீட்டில் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த சாமி பீரோவிலிருந்த 15 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Advertisement
இதுகுறித்து அவர் புகாரளித்த நிலையில், மர்ம நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
Advertisement