ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!
08:58 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
அழகன்குளம்-பனைக்குளம் சந்திப்பில் உள்ள நாடார் வலசை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, கடந்த ஆண்டு இறுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடை, ஆண்டு இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்படும் என உறுதியளித்தனர்.
Advertisement
ஆனால், அதிகாரிகள் வழங்கிய காலக்கெடு முடிந்து ஒரு மாதமாகியும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Advertisement