செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கிய கடல் : மீனவர்கள் அதிர்ச்சி!

02:30 PM Jan 17, 2025 IST | Murugesan M

ராமநாதபுரம் அருகே 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றன. இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் குந்துகால் வரையிலான கடல் பகுதியில் 500-க்கும்‌ மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர்.

இந்நிலையில், பாம்பன் - சின்னப்பாலம் பகுதியில் அதிகாலை நேரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, காற்றின் வேகத்தால் 200- மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதாக கூறப்புகிறது.

Advertisement

இதனால், கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றது. இந்த நிகழ்வால் மீனவர் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், கரையோரத்தில் நத்தை, சிப்பி மற்றும் நண்டு உள்ளிட்டவை இறந்து கிடந்தன.

Advertisement
Tags :
MAINramanathapuramsea recededseeஉள்வாங்கிய கடல்
Advertisement
Next Article