ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஸ்ரீவில்லிபுதூரில் இருந்து வந்துகொண்டிருந்த காரும் அச்சுந்தன் வயல் பகுதியில் நேருக்கு நேர் மோதின. இதில் காரில் பயணித்த 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புப்படையினர் கிராம மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.