ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மாத்திரை வழங்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!
09:58 AM Mar 25, 2025 IST
|
Ramamoorthy S
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.
ஆனால், மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement