ராமநாதபுரம் அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள் - நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!
10:14 AM Dec 18, 2024 IST
|
Murugesan M
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
Advertisement
திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிவிட்டன. அவற்றில் இருந்து வெளியேறும் நீர் கண்மாய்களை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article