ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!
03:24 PM Dec 31, 2024 IST
|
Murugesan M
கடலில் மீன்பிடிக்கும்போது உயிரிழந்த மீனவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காமல் 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக கூறி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Advertisement
இரட்டையூரணி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் 2021ஆம் ஆண்டு உவர் நீர் கடலில் கலக்கும் பகுதியில் மீன்பிடித்தபோது சேற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளாகியும் அறிக்கையை அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவரது மனைவி வசந்தா 2 மகன்களுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
இந்த போராட்டத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தினரும் கலந்து கொண்ட நிலையில், பிரேத பரிசோதனை அளிக்காததால் நிவாரண தொகை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
Advertisement
Next Article