செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராமநாதபுரம் : திரௌபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

01:17 PM Apr 05, 2025 IST | Murugesan M

ராமநாதபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வேடமிட்டு வீதி உலா வந்தனர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 100 ஆண்டுகள் பழமையான தர்மர் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மார்ச் 27-ம் தேதி  பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாபாரத போரின் 17-ம் நாள் நிகழ்வை நினைவுகூரும் வகையில் 9ம் நாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

போரில் வெற்றி பெற்றவுடன் திரெளபதி தனது சிகையை அள்ளி முடியும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அப்போது திரெளபதி அம்மன் வேடமணிந்த பக்தர் திருவாடானை நகர் முழுவதும் உலா வந்து வழிபாடு நடத்தினார்.

Advertisement
Tags :
MAINRamanathapuram: Draupadi Amman Temple festival in full swing!திரௌபதி அம்மன் கோயில்
Advertisement
Next Article