ராமநாதபுரம் : மிளகாய் உற்பத்தி பாதிப்பு - விவசாயிகள் கவலை!
09:57 AM Mar 28, 2025 IST
|
Ramamoorthy S
ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Advertisement
முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கருகல் நோய் ஏற்பட்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது.
இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement